ரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழர் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருந்த மாபெரும் அரசியல் சகாப்தத் தின் சப்தம் மௌனித்தது. ஆம். கண்ணீர்த்துளிகள் எங்களின் கண்கள் வழியாக ஊற்றெடுக்கிறது என்பதைவிட எங்கள் இதயத்தின் வழியாக குருதியாக வழிகின்றது.

Advertisment

kalaingar

கலைஞர் என்ற பெயர்ச்சொல் சுழலும் அரசியல் சக்கரத்தின் அச்சாணி! இந்த அச்சாணி முறிந்ததே என்று கதறுகிறோம்!

கலைஞர் என்ற உயிர்க்கரு இருட்டைக் கிழிக்க வந்த சூரியன், அது மறைந்ததே என்று இயற்கையிடம் மன்றாடுகிறோம்! மனசெல்லாம் புகைமூட்டமாய் இருள்சூழ்கிறது! மீண்டும் வெளிச்சம் வாராதோ என்று விம்மி அழுகிறோம்!

Advertisment

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சியை வலுவான அடித்தளத்தின்மீது அமரவைத்ததோடு மட்டுமின்றி; தமிழ்நாட்டு மக்கள்மீது பெரும் செல்வாக்கைச் செலுத்தும் சக்தியாக உருவெடுத்த மாபெரும் தலைவரை தமிழகம் இழந்து தவிக்கிறதே என்று அழுது தவிக்கிறோம்.

karunasதிராவிடம் என்ற கலாச்சாரச் சொல்லைக் கண்டறிந்தவர் பெரியார்! அதற்கு அணிசேர்த்தவர் அண்ணா! ஆனால் இரத்தமும் சதையும் வழங்கி உயிர்சேர்ந்தவர் கலைஞர்.

கலைஞரின் நீண்ட அரசியல் வாழ்வு, தமிழர் வரலாற்றைப் திருப்பிக்காட்டும் காலக்கண்ணாடி.. தமிழ் நாட்டில் சமூகநீதியின் சாதனைகளை இந்தியக் கூட்டாட்சி யின் உச்சியில் நின்று காலம் அறிந்து கூவிய சேவல் கலைஞர்! சமூக நீதிக்கான இயக்கத்தை அரசியல் கட்சியாக உருமாற்றி அதன் வழி இன்றைய தலைமுறைக் கான திசை காட்டியாக நிற்பவர் கலைஞர்!

Advertisment

தமிழ்நாட்டு அரசியல் ஆணிவேருக்கு தண்ணீரைப் பாய்ச்சிய தமிழ்நதி வற்றி விட்டதை நினைத்து வேதனை அடைகிறோம்! காற்றைச் செலுத்திய கதிரவன் மூச்சை நிறுத்தியதைக் கண்டு சொல்லெண்ணா துயரம் அடைகிறோம்!

கலைஞர் எனும் காலச் சுவடுகளை கரையான்கள் அரித்துவிடமுடியாது! கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்து விடாது! ""தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை'' என்றான் பாவேந்தன்! கலைஞர் தமிழுக்கு, தமிழருக்குத் தொண்டு செய்த தமிழ்வேந்தன். அவர் சாவைத் தழுவினாலும் அவரது புகழ் என்றுமே சாகாது!